For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்கள் அல்ல: இந்திய கடற்படை

By Mathi
Google Oneindia Tamil News

காந்திநகர்: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்தது மீனவர்கள் அல்ல என்று இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 31-ந் தேதி இரவு பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது.

'Bomb' boat crew didn't look like fishermen: Coast Guard

அப்போது கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் சரண் அடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பதற்றம் அடைந்த பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் படகினை மிகவும் வேகமாக செலுத்தினர்.

சந்தேகமடைந்த கடற்படை அவர்களை பின்தொடர்ந்ததால் இந்த படகு வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டது. இதில் படகில் இருந்த 4 பேரும் உயிரிழந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால் நாட்டின் நற்பெயரை கெடுக்க இந்தியா முயற்சி செய்வதாகவும், இந்தியா கூறுவது போல எந்த படகும் செல்லவில்லை என்றும் பாகிஸ்தான் மறுத்துள்ளது

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் படகில் வந்தவர்கள் மீனவர்களை போல தெரியவில்லை. அவர்கள் மீனவர்களை போல உடையையும் அணிந்திருக்கவில்லை. மாறாக படகில் எந்தவொரு மீன்பிடி வலைகளும் தென்படவில்லை. அந்த படகில் 4 பேர் இருந்தனர். அவர்கள் டி-சர்ட்டுகளையும், ஹாப் பேண்டையுமே அணிந்து இருந்தார்கள். இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பியது.

பல இந்திய இன்டலிஜன்ஸ் ஏஜென்சிகள் கூட்டாக இணைந்து இந்த சம்பவத்தை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் உண்மையை கண்டுபிடிப்போம். 24 மணிநேரமும் நாங்கள் எச்சரிக்கையாக உள்ளோம். நமது கப்பல்களும், விமானங்களும் கடற்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் உள்ளன என்று இந்திய கடற்படை கமாண்டர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்

English summary
Indian Coast Guard (ICG) on Saturday said suspicions were raised about the identity of crew of the explosives-laden boat intercepted by them, as they did not resemble fishermen from their dressing style and carried no nets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X