For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் பொருட்களை வாங்கலைன்னா அவ்வளவுதான்.. இந்திய சோஷியல் மீடியா பிரசாரத்தால் பயத்தில் அலறும் சீனா

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சீன பொருட்களை வாங்குவதை இந்தியர்கள் தவிர்க்க ஆரம்பித்துள்ள நிலையில், சீனா திடீரென இந்தியாவை பொருளாதார பெயரை சொல்லி மிரட்டி பார்க்கிறது.

டெல்லியில் உள்ள சதார் பஜார்தான் இந்தியாவின் மிகப்பெரிய, வீட்டு உபயோக பொருள் மொத்த விற்பனை நிலையமாகும். இந்த விற்பனை நிலையத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இந்த செய்தி இந்திய ஊடகங்களில் வெளியான நிலையில், சீனா அதிர்ச்சியடைந்துள்ளது.

Boycott of our goods will hurt Indians, warns China

இதையடுத்து மிரட்டும் வகையில், இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

சீனா பொருட்களை இந்தியா புறக்கணித்தால் அது சீனாவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. 2015 ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இதன் மதிப்பு 2,276.5 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமேயாகும்.

ஆனால்,தங்கள் நாட்டு பொருட்கள் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டால் அது இந்தியாவில் சீனாவின் முதலீட்டை பாதிப்பது மட்டுமின்றி, இருதரப்பு பொருளாதார உறவில் பாதிப்பு ஏற்படும். முறையான மாற்றுப் பொருட்கள் இல்லாமல் சீனப் பொருட்களை புறக்கணித்தால் பாதிப்பானது இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் மட்டுமே தவிர எங்களுக்கு அல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நண்பனும், இந்தியாவின் மிகப்பெரிய எதிரியுமான, சீன உற்பத்தி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் பிரசாரங்களை இந்திய நெட்டிசன்கள் முன்னெடுத்துள்ளனர். இந்த பிரசாரத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்துவிட்டு இந்தியாவில் தயாராகும் பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே மந்த நிலைக்கு சென்றுகொண்டுள்ள சீனாவுக்கு இது பெரும் எரிச்சலை கிளப்பியுள்ளது. எனவே கெஞ்சி கேட்காமல், மிரட்டி பார்க்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய பனக்காட்டு நரிகள், இந்த சலசலப்புக்கு அஞ்சுவார்களா என்ன?

English summary
Amid talks about boycott of Chinese goods in India, China on Thursday warned India that such a boycott would not just affect Chinese investments in India but also bilateral cooperation between the two countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X