தாலி கட்டி ஒரு நாள்தான் ஆச்சு.. மறுநாளே ஹார்ட் அட்டாக்.. மனைவி உடலை கட்டி பிடித்து அழுத மாப்பிள்ளை
ஸ்ரீகாகுளம்: தாலி கட்டி ஒருநாள்தான் ஆனது.. மறுநாளே கல்யாண பெண் ஹார்ட் அட்டாக்கில் இறந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. புதுமனைவியை கட்டிப்பிடித்து கொண்டு மாப்பிள்ளை அழுத சம்பவம் அனைவரின் மனதையும் உருக்கிவிட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கருடகாண்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பெண் தமயந்தி. இவருக்கும் கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும் வீட்டில் திருமணம் செய்ய முடிவானது.

போன வியாழக்கிழமை கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டது.. நந்திகம் மண்டல் சுப்பம்மபெட்டையில் உள்ள ஒரு கோயிலில் ஊரே திரண்டு வந்து வாழ்த்த இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
மறுநாள் பெண் வீட்டில் சம்பிரதாய சடங்குகள் நடந்துள்ளன. இதில் குடும்ப உறவுகள் தம்பதிக்கு வாழ்த்து சொல்லி மாமியார் வீட்டுக்கு வழியனுப்பி வைக்க தயாராகி இருந்தனர். புதுப்பெண்ணும், புத்தம் புது ஆடை, நகைகள் போன்றவற்றை அணிந்து.. கிளம்பி ரெடியாகி தயாரானார்.
அந்த சமயத்தில் திடீரென சுருண்டு விழுந்து மயங்கி விழுந்தார் தமயந்தி. இதனால், உறவினர்கள் பதறி போய், தமயந்தியை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால், தமயந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். தமயந்திக்கு ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாக சொன்னார்கள். இதை கேட்டதுமே உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் தமயந்தியின் சடலம் மாமியார் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு புதுமனைவியின் உடலை கட்டிப்பிடித்து கொண்டு மாப்பிள்ளை கதறி அழுதார். மாப்பிள்ளைதான், தமயந்திக்கு இறுதி சடங்கும் செய்தார்.. ஆயிரம் கனவுகளுடன் வாழ காத்திருந்த இளம்பெண், மாமியார் வீட்டுக்கு வரும்போதே பிணமாகி வந்ததும், கல்யாணம் ஆன மறுநாளே மணமகன், புதுமனைவிக்கு சடங்கு செய்ததும் அந்த பகுதி மக்களை கலங்க வைத்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!