For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடப்பாண்டில் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்படலாம்: ஜேட்லி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பாண்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும், அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தின் மீதும் விதிக்கப்படும் மறைமுக வரியே ஜி.எஸ்.டி.

Budget 2014: Govt hopes to finalise GST contours this year, says FM

ஜி.எஸ்.டி. முறையை கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி எடுத்தது. ஆனால் மாநில அரசுகள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஜி.எஸ்.டி. விதிப்பினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு போதுமான அளவுக்கு ஈடுகட்டுவதில்லை என்று மாநில அரசுகள் ஜி.எஸ்.டி-யிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நாட்டின் வரி நிர்வாகத்தை ஒருமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஜி.எஸ்.டி முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு இதன் மூலம் பெரிய அளவில் வரிவருவாய் கிடைக்கும் என்றார் அருண் ஜேட்லி.

English summary
Committing to expeditiously rolling out Goods and Services Tax (GST), Finance Minister Arun Jaitley today said a solution to the issues relating to the comprehensive indirect tax regime may be finalised in the current year itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X