அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டப்பணி: மோடி, ஜப்பான் பிரதமர் அடிக்கல் நாட்டினர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்தில் இன்று காலை நடந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டினர்.

இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.

Bullet rail project inaugurated by PM Modi and Japanese PM Shinzo Abe

இரு நகரங்கள் இடையேயான 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இது, 350 கி.மீ. வரை பின்னர் அதிகரிக்கப்படும். ரயில், சபர்மதி, வதோதரா உட்பட 12 ரயில்வே நிலையங்களில் நின்றுசெல்லும்.

திட்டத்தின் கல்வெட்டை ரிமோட் கன்ட்ரோல் பொத்தானை அழுத்தி இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர். முன்னதாக விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஜப்பான் நடுவேயான சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் இத்திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இப்போது மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் நாட்டின் முதல் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's first high speed rail project inaugurated by PM Modi & Japanese PM Shinzo Abe in Ahmedabad.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற