சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 77 வழக்குகள்- 307 பேர் கைது-ரூ395.19 கோடி பறிமுதல்: சிபிஐ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

  டெல்லி: சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 307 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

  கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

  CBI arrested 307 Persons after demonetisation

  அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாகவும் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ பலரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.

  இதுவரை மொத்தம் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 180 பேர் என்கிறது சிபிஐ.

  மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  CBI has registered 77 cases during post demonetisation relating to exchange of demonetised currency in various agencies. Amount involved in these cases is around Rs. 395.19 Cr.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற