For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேராடூன் அகாடமி ஆட்சேர்ப்பில் ஊழல்: 3 ராணுவ உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

By Mathi
Google Oneindia Tamil News

டேராடூன்: டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் ஆட் சேர்ப்பில் நிகழ்ந்த மிகப் பெரும் ஊழல் முறைகேடு தொடர்பாக 3 ராணுவ உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி உள்ளது. இதில் C மற்றும் D பிரிவில் வீரர்களை சேர்ப்பதற்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார்.

military

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், டேராடூன் ராணுவ அகாடமியில் சேர்பவர்களுக்கு, ராணுவ லெப். கர்னல்களான அகிலேஷ் மிஸ்ரா, ஜெகதீஷ் பிஷ்நோய், அம்பரீஷ் திவாரி ஆகிய 3 ராணுவ உயரதிகாரிகள் போலி சான்றிதழ்களை வழங்கியிருப்பதுடன், அவர்களின் விடைத்தாள்களுக்குப் பதிலாக வேறு விடைத்தாள்களை மாற்றி முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து 3 அதிகாரிகள் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் விரைவில் சிபிஐயால் கைது செய்யப்பட இருக்கின்றனர்.

English summary
Unearthing a major recruitment scam in the Indian Military Academy here, the CBI has booked three serving Lieutenant Colonels in connection with the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X