For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஆளுநர் அறிக்கை எதுவும் அனுப்பவில்லை: மத்திய அரசு பரபரப்பு தகவல்

தமிழக ஆளுநர் எந்த ஒரு அறிக்கையுமே அனுப்பவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக நிலவரம் குறித்து பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை எதுவும் அனுப்பவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா ஆகியோர் சந்தித்து பேசினர்.

Centre says no report received from TN Governor

இச்சந்திப்பின் போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார். சசிகலாவோ அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கே இருக்கிறது என ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக நிலவரம் குறித்து டெல்லிக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழக அரசு டிஸ்மிஸ் ஆகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசு, தமிழக ஆளுநர் எந்த ஒரு அறிக்கையும் அனுப்பவில்லை. ஜனாதிபதிக்கோ உள்துறை அமைச்சகத்துக்கோ ஆளுநர் அறிக்கை எதுவும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளது.

English summary
The Centre said that the Tamil Nadu Governor has not sent any report to it or the President on the political crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X