5 முறை ஆஞ்சநேயர் வாழ்க என்று கூறுங்கள்.. பருவநிலையை சமாளிக்க பாஜக உறுப்பினர் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: ரமேஷ் சக்சேனா என்பவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இவர் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஆவார்.

இவர் தற்போது போபாலில் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் இவர் பருவநிலையை சமாளிக்க புதிய ஐடியா கொடுத்து இருக்கிறார்.

அதன்படி தினமும் 5 முறை ஆஞ்சநேயர் வாழ்க என்று கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

பருவ நிலை

பருவ நிலை

சில நாட்களுக்கு முன் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி கால நிலை இன்னும் சில நாட்களுக்கு மோசமாக இருக்கும் என்றனர். முக்கியமாக பயிர்கள் அதிக சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

இதற்குத்தான் ரமேஷ் சக்சேனா இந்த ஐடியா கொடுத்துள்ளார். முதலில் அவர் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்ய வேண்டும் என்றார். ஒன்றாக விவசாயிகள் சேர்ந்து பூஜை செய்தால் மட்டுமே இது சரியாகும் என்றார்.

5 முறை

5 முறை

அதுமட்டும் இல்லாமல் தினமும் 5 முறை ஆஞ்சநேயர் வாழ்க , ஆஞ்சநேயர் வாழ்க என்று கூறினால் போதும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆஞ்சநேயர் அருள் மூலம் எளிதாக காலநிலை சாதகமாக மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கட்டாயம் இல்லை

இதற்கு இவர் ''நல்லவேளை பாஜக இன்னும் இதை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former BJP MLA Ramesh Saxena says Chant Hanuman Chalisa daily to over come natural disasters in Madhya Pradesh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற