சேத்தன் பகத்தின் “2 ஸ்டேட்ஸ்” ஏப்ரலில் ரிலீஸ்.....
மும்பை: உங்களில் எத்தனை பேருக்கு சேத்தன் பகத்தை தெரியாது என்று கேட்பதை விட உங்களில் எத்தனையோ பேருக்கு அவரை தெரியும் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
அந்த அளவிற்கு இளைஞர்களை கவர்ந்த பல நாவல்களை எழுதிய புது யுக நாவலாசிரியர்தான் சேத்தன்.
அவருடைய மிக மிக பிரபலமான, விற்பனையில் சாதனை படைத்த நாவலான "2 ஸ்டேட்ஸ்" தான் தற்போது படமாக்கப் பட்டு ஏப்ரலில் வெளியாக உள்ளது.

அய்யராத்து பொண்ணு, பஞ்சாபி பையன்:
அக்மார்க் பஞ்சாபி பையனான க்ரிஷ்க்கும், டிபிக்கல் தமிழ்நாட்டு அய்யராத்து பொண்ணான அனன்யாவிற்கும் ஐ.ஐ.எம் மில் காதல் மலர்கிறது.
வாங்க பழகலாம்:
பையனும்,பொண்ணும் காதலில் விழுவது சகஜம். ஆனால், இந்திய கலாச்சாரத்தை பொறுத்த வரை இரண்டு பேரின் குடும்பத்திற்கு இடையிலேயும் காதல் மலர வேண்டும் என்பதுதான் மறுக்கப்பட முடியாத உண்மை.
இது டிபரண்ட் காதல் கதை:
இதைதான் சுவையாக விவரித்து இருந்தது அனன்யா-க்ரிஷ் காதல் கதையான சேத்தனின் "2 ஸ்டேட்ஸ்" நாவல்.
கொள்ளை கொண்ட நாவல் படமானதே:
தற்போது பல்லாயிர கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த காதல் கதைதான் அர்ஜூன் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அனைவரது எதிர்ப்பார்ப்பையும் அதன் வெளியீட்டு நாளின் மீது திருப்பியுள்ளது.
காதல் மொழி,மதம் அறியாது:
இந்தியாவின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாச்சாரத்திலும்,உணவுப்பழக்கங்களிலும்,நடைமுறைகளிலும் வெவ்வேறான இரண்டு குடும்பங்களில் இவர்களின் காதல் புகுந்து அவர்களை எப்படி ஒன்றாக்குகிறது என்பதை ஏப்ரல் 18 அன்று தியேட்டர்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications