ஜனாதிபதியாக இன்று சில நொடிகள் பதவி வகிக்க போகும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கெஹர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜெஎஸ் கெஹர் இன்று சில வினாடிகள் குடியரசுத் தலைவராக இருப்பார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்தை தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வார்.

Chief Justice of India J S Khehar will be deemed the President of India for a few seconds today

அப்போது வாகனத்தின் இடதுபுறம் ராம்நாத் கோவிந்தும் வலதுபுறம் பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருப்பார்கள். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் தலைமை நீதிபதி ஜெஎஸ் கெஹர், ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

பதவி பிரமாணம் முடிந்த பிறகு ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வார். அப்போது வாகனத்தின் வலதுபுறம் ராம்நாத் கோவிந்தும் இடதுபுறம் பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருப்பார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவரிடம் இருந்து புதிய குடியரசுத் தலைவருக்கு பதவி ஒப்படைப்பக்கப்படும் அந்த சில விநாடிகள் இடைவெளியில் நாட்டின் தலைமை நீதிபதி ஜெஎஸ்.கெஹர் குடியரசுத் தலைவராக கருதப்படுவார்.

JS Khehar appointed as CJI, first Sikh to hold post | Oneindia News

பதவியேற்பு விழா முடிந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு உரையாற்றுவார். இதைத்தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் ராஜாஜி மார்க்கில் உள்ள 10வது நம்பர் வீட்டிற்கு அனுப்பி வைப்பார். அங்கு நிதியமையச்சர் அருண்ஜேட்லி பிரணாப் முகர்ஜியை வரவேற்பார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Justice of India J S Khehar will be deemed the President of India for a few seconds today. The CJI who will administer the oath to Ram Nath Kovind will be deemed the President of India for a few seconds when the chair is being exchanged with outgoing President, Pranab Mukherjee.
Please Wait while comments are loading...