For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் நகரங்களில் ரயில் பாதைகள், சாலை பணிகளை மேம்படுத்தி வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தானின் பெஷாவர் முதல் கராச்சி வரை 1872 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாகவும், தரம் உயர்த்தப்பட்டும் வருகிறது. இத்திட்டத்திற்காக 45000 கோடி ரூபாய் கடனை தனது நட்பு நாடான சீனாவிடம் கேட்டுள்ளது பாகிஸ்தான்.

குட் நியூஸ்.. உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும்.. மார்டனா அறிவிப்பு! குட் நியூஸ்.. உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும்.. மார்டனா அறிவிப்பு!

பாகிஸ்தான் தவிப்பு

பாகிஸ்தான் தவிப்பு

ஆனால் தற்போதைய நிலையில் கொரோனா காரணமாக பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதனால் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இந்த சூழலில் புதிதாக கடனை கேட்டுள்ளது.

சீனா மறுப்பு

சீனா மறுப்பு

இது தொடர்பாக அண்மையில் நடந்து பேச்சுவார்த்தையில் ரயில் திட்டத்திற்கு பாகிஸ்தான் கடன் கேட்டது. சீனாவோ, கூடுதல் உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே கடன் தருவோம் என்று நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையையும் சீனா நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் கடன்

பாகிஸ்தான் கடன்

உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு மட்டுமே ஜி -20 நாடுகளிடமிருந்து கடன் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அடிப்படையில் பாகிஸ்தான் கடன் கேட்ட நிலையில், சீனா கூடுதல் உத்தரவாதம் கேட்டுள்ளது.

சீனா அளித்த பதில்

சீனா அளித்த பதில்

6 பில்லியன் டாலர் (45000 கோடி ரூபாய் ) கடனை சீனாவிடம் 1 சதவீத வட்டி விகிதத்தில் மட்டுமே பெறுவது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 10 வருட கால அவகாசம் ஆகியவை பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், சீனா வணிக மற்றும் சலுகை கடன்களை முன்மொழிந்துள்ளது, திட்ட செலவில் 85 சதவீதத்தை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன். இரு ஆண்டுகளிலிருந்து திருப்பிச் செலுத்த தொடங்க வேண்டும் என்று சீன முன்மொழிந்துள்ளது.

English summary
Pakistans friendly neighbour China, which has time and again bailed it out of its financial crisis, has in a queer turn of events now demanded guarantees before sanctioning fresh $6 billion in loan to Islamabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X