For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக்.. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து.. குவிக்கப்பட்ட போர் ஜெட்கள்.. கடைசி நொடியில் தடுக்கப்பட்ட மோதல்

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் சீனா துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இரண்டு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் விமானங்களை குவிக்க தொடங்கி உள்ளது.

லடாக்கில் நேற்று இரவு சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. சூசுல் பகுதி அருகே இரண்டு நாட்டு ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. வானத்தை நோக்கி சீன வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள்.

இதனால் எல்லையில் பெரிய அளவில் மோதல் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களும் எல்லையில் திருப்பி தயாராகவே இருந்துள்ளனர்.

ஐஸ்வர்யாவை நோக்கியிருந்த கேமரா.. டக்குன்னு கட் செஞ்சா.. அபிஷேக் பச்சன் கால்.. உத்துப் பார்த்தா!ஐஸ்வர்யாவை நோக்கியிருந்த கேமரா.. டக்குன்னு கட் செஞ்சா.. அபிஷேக் பச்சன் கால்.. உத்துப் பார்த்தா!

தயார் நிலை

தயார் நிலை

ஆனால் இந்திய ராணுவத்தின் மூத்த வீரர்கள் சிலர் புகுந்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். நிலைமையை சரியாக கையாண்டு உள்ளனர். இதனால் இந்திய வீரர்கள் சீன வீரர்களை தாக்கவில்லை, அதேபோல் துப்பாக்கி சூடும் நடத்தவில்லை. சரியான நேரத்தில் செய்யப்பட பேச்சுவார்த்தை காரணமாக பெரிய மோதல் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. எல்லை ஒப்பந்தங்களை மதித்து இந்தியா துப்பாக்கி சூட்டை தவிர்த்து உள்ளது. ஆனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

லடாக் எப்படி

லடாக் எப்படி

இந்த நிலையில் இன்னொரு பக்கம் லடாக்கில் போர் ஜெட்கள் குவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் இரண்டு பக்கங்களிலும் போர் ஜெட்கள் குவிக்கபட்டுள்ளது. அங்கு மோதல் நடந்த இடத்தில் இருந்து 100 கிமீ தூரத்தில் சீன ராணுவம் சின்ன விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளளது. இங்கு சீனாவின் ஜெ 20 போர் விமானங்களை களமிறக்கப்பட்டுள்ளது. சுசூல் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இந்த போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை

விமானப்படை

இன்னொரு பக்கம் லடாக்கில் இருக்கும் 310 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சீனாவின் ஹோட்டன் விமானப்படை தளத்தில் தற்போது சீனா விமானங்களை களமிறக்கி உள்ளது. சுகோய் 30 எம்கேஐ,ஜாகுவார், மிராஜ் 2000 விமானங்களையே சீனா களமிறக்கி உள்ளது. எல்லையில் மோதல் நடந்த நிலையில் சீனாவின் போர் விமானங்கள் லடாக் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வருகிறது.

இந்தியா விமானம்

இந்தியா விமானம்

இந்தியா தனது சுகோய் மிக் 29, டஸால்ட் மிராஜ் 2000, மிக்கோயான் மிக 21, சுகோய் எஸ்யு 27 ஆகிய போர் விமானங்களை லடாக்கில் குவிக்க தொடங்கி உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் துப்பாக்கியால் சண்டை நடக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளதால் அடுத்த கட்டத்திற்கு இரண்டு நாட்டு ராணுவமும் தயார் ஆகியுள்ளது. இதனால் எல்லையில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது .

English summary
China standoff with India: Jets deployed in the border, How a large fight stopped at the last minute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X