8-ஆம் வகுப்பு பாஸ் ஆனவருக்கு கல்வி துறை.. நான் மட்டும் என்ன படித்தேன்... முதல்வரா இல்லே.. குமாரசாமி
கர்நாடக அமைச்சரவையில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி செய்தவருக்கு கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக அமைச்சரவையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு கல்வித் துறை ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினருக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜேடிஎஸ் எம்எல்ஏ ஜி.டி. தேவகௌடாவுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்ததற்காகவே முக்கிய துறையை குமாரசாமி ஒதுக்கியுள்ளார். ஆனால் இவர் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் இந்த ஒதுக்கீடு குறித்து சர்ச்சை எழுந்தது.
இது குறித்து முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சில துறைகளில் சிறப்பாக செயல்பட விருப்பப்படுவர். ஆனால் அனைத்து துறைகளிலும் திறமையாக வேலை செய்ய சந்தர்ப்பம் உள்ளது. நான் என்ன படித்துள்ளேன். நான் முதல்வராக பணியாற்றுகிறேனே. அவருக்கு நிதித் துறை ஒதுக்கீடு செய்யலாமா.
சில துறைகளை சிலருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் அதுபோன்ற முடிவுகளை கட்சிதான் எடுக்கும் என்றார் குமாரசாமி. இவர் பிஎஸ்சி படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications