For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி சுரங்க வழக்கிலும் சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது சுப்ரீம் கோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா சந்தித்து பேசியதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் நேற்று ரஞ்சித் சின்கா பதிலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Coal scam: Supreme Court issues notice to CBI chief Ranjit Sinha

இதனிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்கா காப்பாற்ற முயல்வதால் எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மற்றொரு வழக்கை பிரசாந்த் பூஷன் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சி சின்கா 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 19ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court issued a notice to CBI director Ranjit Sinha on Tuesday on a plea seeking his removal and an SIT probe against him for allegedly protecting the accused in the coal scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X