For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Congress Vs BJP: இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் எது சிறப்பானது?.. ஓர் ஒப்பீடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Vs Congress: பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் எது பெஸ்ட்

    சென்னை: தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் மக்கள் சீர் தூக்கி பார்த்து வருகின்றனர்.

    எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் அதில் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிப்பது தேர்தல் அறிக்கைகள்தான். அந்த வகையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

    இதில் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

    பாஜக தேர்தல் அறிக்கை.. நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான ஒரு வாக்குறுதியும் இருக்கு பாஜக தேர்தல் அறிக்கை.. நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான ஒரு வாக்குறுதியும் இருக்கு

    வேலைவாய்ப்பு

    வேலைவாய்ப்பு

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை எடுத்துக் கொண்டால் அதில் முதல் வாக்குறுதியாக ஏழை மக்களுக்கு நியாய் திட்டம் மூலம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதாகும். இதற்கடுத்தாற் போல் வேலைவாய்ப்புகள். 20 லட்சம் காலிப்பணியிடங்கள் நிறைவேற்றப்படும்.

    இலவச அனுமதி

    இலவச அனுமதி

    விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாய வளர்ச்சி மற்றும் திட்டங்களுக்கு தேசிய ஆணையம் அமைக்கப்படும். ஒவ்வொரு குடிமகன்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள், இலவச மருந்துகள், மருத்துவமனையில் இலவச அனுமதி ஆகியவற்றை காங்கிரஸ் கொண்டு வரும் என வாக்குறுதி அளித்துள்ளது.

    காலிப்பணியிடங்கள்

    காலிப்பணியிடங்கள்

    அதுபோல் ஜிடிபியில் கல்வித் துறையில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அது போல் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். அது போல் பெண்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போது 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    நீட் தேர்வு

    நீட் தேர்வு

    ஆயுத படையினருக்கான சிறப்பு சட்டத்தை நீக்குவது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்துக்கு நீட் தேர்வு இல்லை. மற்ற மாநிலங்களில் நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும்படி இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஊழல் இல்லா இந்தியா

    ஊழல் இல்லா இந்தியா

    அது போல் பாஜகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கொண்டோமேயானால் ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கப்படும். காசநோய் ஒழிக்கப்படும். ஊழல் இல்லா இந்தியா உருவாக்கப்படும்.

    மத நம்பிக்கைகள்

    மத நம்பிக்கைகள்

    இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும். ராமர் கோவில் கட்டப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைக்கப்படும். அவை பாதுகாக்கப்படும். நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வி தொடர்பான அறிவிப்பு

    கல்வி தொடர்பான அறிவிப்பு

    பாஜக அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் நீட் தேர்வு குறித்தும் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து எந்த தகவலையும் கூறவில்லை. அது போல் கல்வி தொடர்பான திட்டங்கள் ஏதும் பாஜக அறிவிக்கவில்லை.

    English summary
    BJP and Congress election manifesto -a comparison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X