குஜராத்தில், ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு.. அதிருஷ்டவசமாக தப்பிய ராகுல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குஜராத்தில், ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு.. அதிருஷ்டவசமாக தப்பிய ராகுல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Cong VP Rahul Gandhi car attacked in Gujarat

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் மர்ம நபர்கள் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் சென்றபோது, அவரது பாதுகாப்பு கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது.

 Cong VP Rahul Gandhi car attacked in Gujarat

அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார். இந்த தாக்குதல் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற வெறுப்புணர்வால் பாஜகவால் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது. உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான தாக்குதல் குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்தியுள்ளது. இதனிடையே கல்வீசியவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது பாஜக என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நலமாக இருப்பதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் காங்கிரசை வலுப்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுலுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியும் போராட்டம் நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு ரிசார்ட்டில் அடைத்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடந்துள்ளது. மக்களை வெள்ளத்தில் தவிக்கவிட்டுவிட்டு, எம்.எல்.ஏக்களை சொகுசாக இருக்க வைப்பதா? என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP goons attack Cong VP Rahulji's car in Lal Chowk, Dhanera, Banaskanta, Gujarat. Disgusting & disgraceful: RS Surjewala, Cong on Twitter
Please Wait while comments are loading...