மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கட்டும்.. நாங்க ஆதரிப்போம்.. காங்கிரஸ் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக தேர்தலில் திடீர் டுவிஸ்ட்-வீடியோ

  பெங்களூர்: மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகவும் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

  கர்நாடக மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதை வைத்து மோடிக்கு வாழ்த்து செய்திகளும் குவிந்தன.

  பாஜகவினரும் ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்ற செய்திகளும், மத்திய அமைச்சர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த செய்திகளும் வந்த வண்ணம் இருந்தன.

  இடியை இறக்கிய திடீர் திருப்பம்

  இடியை இறக்கிய திடீர் திருப்பம்

  இந்த சந்தோஷத்தில் இடி இறங்கியது போல் திடீர் திருப்பம் ஏற்பட்டது. எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகி விட்டது.

  அதிரடியாக குதித்த காங்.

  அதிரடியாக குதித்த காங்.

  இதையடுத்து காங்கிரஸை ஆதரிக்குமாறும் குமாரசாமிதான் முதல்வர் என்றும் சோனியா காந்தி , தேவகௌடாவிடம் ஆலோசனை செய்தார். அதை அக்கட்சி ஏற்றுக் கொண்டது.

  குலாம் நபி - சித்தராமையா பேட்டி

  குலாம் நபி - சித்தராமையா பேட்டி

  பின்னர் இதுகுறித்து பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், சித்தராமையா உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது காங்கிரஸ் ஆதரிக்குமாறு நாங்கள் விடுத்த கோரிக்கையை மஜத கட்சியின் தேவ கௌடாவும், குமாரசாமியும் ஏற்றுக் கொண்டனர்.

  குமாரசாமிக்கு ஆதரவு

  குமாரசாமிக்கு ஆதரவு

  அவர்கள் ஆட்சி அமைக்க நாங்களும் ஆதரவு தருகிறோம். அக்கட்சியில் யார் முதல்வர் என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எங்கள் கட்சியினரும், ஜேடிஎஸ் கட்சியினரும் இணைந்து கூட்டாக சென்று ஆளுநர் வஜுபாயை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுப்போம் என்றனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress announces that they will support JDS to form government in Karnataka.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற