சூடுபிடிக்கும் குஜராத் சட்டசபை தேர்தல்.. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக டிசம்பர் 9ம் தேதி, 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 14ம் தேதி, 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Congress first list of candidates for Gujarat polls released

ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பிரசாரம் செய்து வருகின்றன. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்றுறு வெளியிட்டுள்ளது.

மீதமுள்ள 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சக்திசிங் கோகில் மற்றும் அர்ஜுன் மத்வாடியா ஆகியோரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனிடையே தப்பான, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை பாஜக முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் மனிஷ் தோஷி தெரிவித்துள்ளார். இதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress party today released its first list 77 candidates for the Gujarat Assembly election.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற