ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன் உல்லாசம்! வெளியான பரபர வீடியோ! அரசியலுக்கு குட்பை சொன்ன காங். தலைவர்
காந்தி நகர்: இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குக் காங்கிரசுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போது நடக்கும் சம்பவங்கள் எதுவும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இல்லை.
சமீபத்தில் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இப்போது காங்கிரசுக்கு அடுத்த அதிர்ச்சியாக அம்மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

வீடியோ
இரு முறை குஜராத் காங்கிரஸ் தலைவராகவும் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பரத்சிங் சோலங்கி. குஜராத் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், ஹோட்டலில் இளம் பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வேறு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு, அவரது மனைவி ரேஷ்மா படேல் பரத்சிங்கை தாக்கும் வீடியோவும் இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தாக்குதல்
சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தில், பரத்சிங் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் ஹோட்டல் அறை ஒன்றில் நுழைகிறார். அறையின் உள்ளே பரத்சிங் சோலங்கி இளம் பெண்ணுடன் தனிமையில் இருப்பது பதிவாகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரேஷ்மா படேல் பரத்சிங்கை முதலில் கொடூரமாக தாக்குகிறார். அதன் பின்னர், அந்த இளம் பெண்ணையும் ஆவேசமாகத் தாக்குகிறார். அதை பரத்சிங் தடுக்க முயல்வதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

சிறு பிரேக்
மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த வீடியோ காங்கிரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சில மாதங்கள் அரசியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. கட்சித் தலைமை எனக்கு எவ்வித அழுத்தமும் தரவில்லை.

சூனியம் வைக்க முயற்சி
நானும் அவரும் (ரேஷ்மா படேல்) பல ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை. எனது சொத்தை அபகரிப்பதற்காகக் கடந்த காலத்தில் முயன்றார். மேலும், என்னையும் தாக்கினார். எனக்குச் சூனியம் வைக்கக் கூட அவர் முயன்றார். இதனால் அவரிடம் விவாகரத்து கோரி உள்ளேன். ரேஷ்மா படேல் எனது அரசியல் எதிரிகளுடன் கைகோர்த்து உள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் எனக்கும், காங்கிரசுக்கும் தீங்கு விளைவிக்கவே அவர் இப்படிச் செய்கிறார்.

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் இதுபோன்ற பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுகின்றன. என்னுடைய இமேஜையும், காங்கிரஸையும் களங்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆதாயம் அடைய விரும்புகிறார்கள். எனவே, சில மாதங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள இருக்கிறேன். சமூக பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

மக்கள் நலன்
இந்த காலகட்டத்தில் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திக்க அதிக நேரம் செலவிடுவேன்," என்று அவர் கூறினார். இன்னும் சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications