வாரணாசியில் மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் உள்ளூர் எம்.எல்.ஏ. அஜய் ராய் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி மதுசூதன் மிஸ்திரியை நிறுத்தியுள்ளது.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது.
வாரணாசியில் உள்ளூர் எம்.எல்.ஏ அஜய் ராய் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications