For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு சதி அம்பலம்: அது கோப்ரா போஸ்ட் அல்ல.. காங்கிரஸ் போஸ்ட்- பாஜக

By Mathi
|

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு சதியை கோப்ரா போஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்தியதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு திட்டமிட்ட பயிற்சி கரசேவகர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை கோப்ராபோஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்தியது.

Congress-post not Cobrapost, says BJP for Babri Masjid sting

இந்த பாபர் மசூதி இடிப்பு சதியில் விஸ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனாவின் பங்களிப்புகளை அந்தந்த கட்சித் தலைவர்கள் தெரிவித்த வீடியோக்களையே ஆதாரமாகவும் கோப்ரா போஸ்ட் தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த கோப்ராபோஸ்ட் செய்திக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், அது கோப்ராபோஸ்ட் அல்ல.. காங்கிரஸ் போஸ்ட்.. கோப்ராபோஸ்ட் காங்கிரஸ் தலைவர்களிடம் இப்படி ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியதா? அல்லது காமன்வெல்த், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் விவகாரங்களில் இப்படி செய்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே கோப்ரா போஸ்ட் செய்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஓரிருநாட்கள் இருக்கும் நிலையில் இத்தகைய செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற என்று அப்புகாரில் பாஜக கூறியுள்ளது.

English summary
The BJP has complained to the Election Commission against a sting operation by investigative portal Cobrapost on the 1992 Babri Mosque demolition and said its telecast should be barred, with the general election three days away. "It is not Cobrapost, it is Congress post," said senior BJP leader Ravi Shankar Prasad. "Has Cobrapost done any sting of a big Congress leader? Or on coalgate, Commonwealth Games, Railways or AgustaWestland?"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X