கோயிலுக்கு போறதை கூடவா பாஜக சந்தேகப்படும்.. ஆதாரத்தோடு ராகுல் காந்தி தக்க பதிலடி

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 20 நாட்கள் ஆன்மீக பயணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சிவனை தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
ஆனால், அவர் தனது ட்விட்டரில், அதுகுறத்து ட்வீட் மட்டுமே செய்து வருவதாகவும், ராகுல் காந்தியின் பயணம் குறித்த போட்டோ இல்லை என்றும், பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். ராகுல் காந்தி வேறு எங்கோ இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர்.

இதையடுத்து யாத்திரையின் சில போட்டோக்களை ராகுல் காந்தி வெளியிட்டார். ஆனால், அவர் வைத்துள்ள கைத்தடியின் நிழல் கீழே விழுவதுபோல போட்டோவில் இல்லை. எனவே இது ஃபேக் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம் செய்தார்.
இது என்ன வம்பா போச்சே என நினைத்த ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும், இப்போது வரிசையாக, போட்டோக்கள் வீடியோக்களை ரிலீஸ் செய்துள்ளது.
Leaving all the haters behind, Congress President @RahulGandhi sets the pace during his #KailashYatra. Can you keep up? pic.twitter.com/aphQ8B6CAn
— Congress (@INCIndia) September 7, 2018
காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி நடந்து சென்றபோது ஃபிட்னஸ் ஆப்பில் பதிவான, தொலைவு, காலடி தூரம் போன்றவற்றையும் வெளியிட்டு பாஜக தலைவர்கள் வாயை அடக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது.
#WATCH:Congress President Rahul Gandhi during #KailashMansarovarYatra with other pilgrims pic.twitter.com/G4XUjss0zu
— ANI (@ANI) September 7, 2018
ராகுல் காந்தி ஒரு சிவ பக்தன், இந்து மதத்தை பின்பற்றுபவர் என்ற தோற்றம் ஏற்பட்டுவிட கூடாது என பாஜக நினைக்கிறது. அதை தடுக்க காங்கிரஸ் முயல்கிறது. எனவேதான், பக்தியோடு செல்லும் யாத்திரையும், அரசியலாக்கப்பட்டுவிட்டது.