பெட்ரோல் விலை குறைஞ்சிருக்கு பாருங்க.. மோடியை டேக் செய்து பாஜக டிவிட்.. காங்கிரஸ் பதிலடி
பிரதமர் மோடியை டேக் செய்து பாஜக செய்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசலின் தற்போதைய விலை குறித்து பிரதமர் மோடியை டேக் செய்து பாஜக செய்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதில் இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏற்பட்டு அதிகரித்தது, இந்த நிலையில்தான் பாஜக இதுகுறித்து வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது.

என்ன விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.
|
பாஜகவின் டிவிட்
இந்த நிலையில்தான் பாஜக இதுகுறித்து வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இந்தியா முழுக்க பெட்ரோல் விலை ஏற்றம் குறைவாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட குறைவாக உள்ளது என்று கிராப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் ஆட்சியை விட பெட்ரோல் விலை குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியையும் டேக் செய்து உள்ளனர்.

விளக்கம் அளித்தனர்
இதற்கு பாஜக ஆதரவாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதாவது இப்போது பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தப்பட்ட சதவிகிதத்தை விட இப்போது விலை உயர்த்தப்படும் சதவிகிதம் குறைவாகத்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்று வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது.
|
காங்கிரஸ் பதிலடி
இதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் கிராப் உருவாக்கி, பதில் அளித்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் விலை உயர உயர காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கு டிவிட்டர் போர் தொடங்கியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications