For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருந்தால் 26000 பேர் தனிமையில்.. துபாய் சென்றதை மறைத்த நபருக்கு கொரோனா.. பலருக்கு பரவிய கொடூரம்

Google Oneindia Tamil News

போபால்: துபாய் சென்று திரும்பிய மத்திய பிரதேச நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததுடன் தாய் இறந்ததுக்கு மத வழக்கப்படி விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விருந்தில் பங்கேற்றவர்கள் உள்பட 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Recommended Video

    இதுதான் கொரோனா பரவும் பேட்டர்ன்... மத்திய அரசு அதிரடி

    வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று நினைத்து வெளிநாடு சென்று வந்த தகவல்களை ஆங்காங்கே மறைக்கிறார்கள். அப்படி மறைத்தவர்கள் விபரீதங்கள் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவ இவர்கள் காரணமாகிறார்கள்.

    அப்படித்தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் துபாயில் இருந்து திரும்பி உள்ளார். ஆனால் அவர் அந்த தகவலை மறைத்ததால் மனைவி உள்பட இன்று பலருக்கும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்துள்ளார். வெளிநாடு சென்ற தகவலை அவர் கிடுக்குப்பிடி விசாரணைக்கு பிறகே தெரிவித்துள்ளார்.

    நுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்புநுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்பு

    ம.பியில் சம்பவம்

    ம.பியில் சம்பவம்

    இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்ட சப் கலெக்டர் ஆர்.எஸ்.பக்னா கூறுகையில், ''மொரேனா நகரைச் சேர்ந்தவர் துபாயில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவரின் அம்மா இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பி உள்ளார். அவரின் தாய் இறந்தபின் 13-வது நாள் காரியம் செய்துள்ளார். அதன்பிறகு அவருடைய மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-ம் தேதி விருந்து வைத்திருக்கிறார். இந் விருந்தில் சுமார் 2000 பேர் பங்கேற்று உள்ளார்கள்.

    தகவலை மறைத்தார்

    தகவலை மறைத்தார்

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி அவருக்கும், அவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நபருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதித்ததற்கான அறிகுறிகள் இருந்தது. இதனால் அந்த பெண்ணின் கணவரிடம் சமீபத்தில் வெளிநாடு சென்றீர்களா என மாவட்ட அரசு தலைமை மருத்துவர் ஆர்.சி பந்தில் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் தான் துபாயிலிருந்து திரும்பியதை அந்த நபர் மறுத்துவிட்டார்.

    சரிமாரியாக விசாரணை

    சரிமாரியாக விசாரணை

    இந்நிலையில் வழக்கமான சிகிச்சையளித்த நிலையில் இருவரின் நிலைமையும் மிகவும் மோசமடைந்ததால் தனி வார்டுக்கு மாற்றினர். அதன்பிறகு மருத்துவர்கள் அந்த நபரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அந்த விசாரணைக்கு பிறகே தான் துபாயிலிருந்து கடந்த மார்ச் 17-ம் தேதி வந்ததை கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் சோதனையை தீவிரப்படுத்தினர்.

    10 பேருக்கு கொரோனா

    10 பேருக்கு கொரோனா

    தொடர்பு தடமறிதல் முறையில் சோதித்த சுகாதாரத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர் அந்த 10 பேரும் அந்த துபாய் நபருடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள் என்பதை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் எமர்ஜென்சியை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    விருந்தால் சிக்கல்

    விருந்தால் சிக்கல்

    மின்னல் வேகத்தில் செயல்பட்ட அதிகாரிகள் .அந்த நபர் வைத்த விருந்தில் பங்கேற்றவர்களின் பட்டியல் முழுமையாக தயார் செய்து 1,200 பேரை கண்டுபிடித்தனர். அவர் பொதுவார்டில் சிகிச்சை பெற்ற போது தன்னுடன் இருந்த 1200 பேருடன் நெருக்கமாக பேசி பழகியதை கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர். அத்துடன் விருந்தில் பங்கேற்றவர்கள் உள்பட 26 ஆயிரம் பேரை வீட்டில் தனிமைப்படுத்தி தெருக்களுக்கு சீல் வைத்துள்ளனர்" இவ்வாறு ஆர்.எஸ்.பக்னா தெரிவித்தார்.

    English summary
    covid 19 outbreak in madhya pradesh Coronavirus to the person who return from Dubai, 10 affected, 26000 quarantine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X