டெய்லிஹண்ட், ஏஎம்ஜி மீடியா நடத்திய Story For Glory.. 12 பேர் வெற்றியாளர்களாக அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் மீடியா துறையில் சாதிக்கும் வகையிலான திறமையாளர்களை கண்டறிய SToryForGlory எனும் நிகழ்ச்சி உரிய பயிற்சிகளுடன் நடத்தப்பட்டது. இதில் 1000 விண்ணப்பத்தாரர்களில் 12 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள செய்தி தளங்களில் டெய்லிஹண்ட்டும் ஒன்றாக உள்ளது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளை செய்திகளை வழங்கி வருகிறது.
டெய்லிஹண்ட் (Daily Hunt),அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்குடன் (AGM Media Network) இணைந்து இந்தியாவில் திறமையாக கதை சொல்பவர்களை தேடும் வகையில் #StoryForGlory நிகழ்ச்சியை நடத்தியது.

20 பேருக்கு பயிற்சி
இந்த StoryforGloryல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்கள் வீடியோ மூலமாகவும், எழுத்து வடிவமாகவும் Story சொல்லும் திறமையை வெளிக்காட்டினர். இதில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு எம்ஐசிஏ மீடியா அகாடமியில் 8 வாரம் பெல்லோஷிப் 2 பயிற்சி கற்றல் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு அச்சு மற்றும் வீடியோ என்று பிரிவுகளாக போட்டி பிரித்து நடத்தப்பட்டது.
12 பேர் வெற்றி
இந்த போட்டியிலும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிரூபித்தனர். திறமையுடன் தனித்துவமாக செயல்பட்ட 12 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இறுதியில் டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தலைமை எடிட்டர் மற்றும் சிஇஓ சஞ்சய் புகாலியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செயல் இயக்குனர் அனந்த் கோனகா, பிலிம் கம்பெனியன் நிறுவனம் அனுபமா சோப்ரா, ஷீதபிபிள் நிறுவனர் சாய்லி சோப்ரா, Ganon connection நிறுவனர் நீலேஷ் மிஸ்ரா, பேக்டர் டெய்லி நிறுவனம் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் அடங்கிய நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.
வெற்றியாளர்களுக்கு வாய்ப்பு
இந்த வெற்றியாளர்கள் அனைவரும் பத்திரிகை துறையில் நுழையவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களிடம் உள்ள தனித்துவத்தை அடையாளம் காண்பதற்கான முன்முயற்சியை மேற்கொள்வது மட்டுமின்றி பத்திரிகை துறையில் சாதிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
டெய்லிஹண்ட் நிறுவனர் கூறுவது என்ன?
இதுபற்றி டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, "இந்தியாவில் ஊடகத்தின் திறனை மேம்படுத்துவதிலும் புதிய வகையில் வடிவமைக்கவும் டெய்லிஹண்ட் உறுதியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இந்தியாவில் மிகச்சிறந்த வகையில் Story சொல்லும் நபர்களை தேர்வு செய்துள்ளோம். தற்போதைய நிலையில் அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் இவர்களுக்கான தேவை உள்ளது. இதனால் தான் 'StoryofGlory' நடத்தினோம். இதன்மூலம் சிறந்த வகையில் கதை எழுதி சொல்லும் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கான தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம்'' என்றார்.
ஏஎம்ஜி சிஇஓ
இதுபற்றி ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் தலைமை எடிட்டர் மற்றும் சிஇஓ சஞ்சய் புகாலியா கூறுகையில், ‛‛இந்தியாவில் பல திறமையாளர்கள் உள்ளனர். மேலும் Story சொல்லும் நபர்களின் தாயகம் இந்தியா என்றால் மிகையாகாது. Dailyhunt உடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை ஆசிரியர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்குவது சிறப்பானதாகும். இதற்காக எங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்பது அமோகமாக உள்ளது. இந்த முயற்சி என்பது இந்தியாவின் மிகவும் திறமையான படைப்பாளிகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமான செயலை செய்ய வைப்பது தான்'' என்றார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications