தமிழக அரசு வசம் உள்ள கோவில்களில் தலித்களுக்குத் தடை.. தலித் தலைவர் புகார்
டெல்லி: திருப்பூரில், தமிழக அரசின் வசம் உள்ள பல கோவில்களில் தலித் மக்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவதில்லை என்று டெல்லியில் நடந்த தலித் மற்றும் தாழ்த்தப்படோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தலித் விடுதலை இயக்க துணைப் பொதுச் செயலாளர் கருப்பையா குற்றம் சாட்டினார்.
டெல்லி விஞ்ஞான பவனில், தலித் மற்றும் தாழ்த்தப்படோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 8 மற்றும் 9 ம் தேதிளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சின் துணைத் தலைவர் ராகுல் காந்தி துவக்கிவைத்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உ.பி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலித் மற்றும் தாழத்தப்பட்ட அமைப்புகள், அரசு சங்கங்கள் ஆகியவற்றின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலித் விடுதலை இயக்க இணைப் பொது செயலாளர் கருப்பையா பேசியதாவது..
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பல கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவைகளில் தலித் மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும், தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே, வருடம் ஒரு முறை இந்த சட்டம் குறித்து ஆணையம் ஆய்வு நடத்த வேண்டும்.
அடுத்து, மத்திய அரசு தலித் மக்களுக்காக, தமிழகத்தில் சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் சுமார் ரூ 37 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதில் வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே, மீதி நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் சமூக நீதிக்கான மத்திய அமைச்ர் எல்சா குமாரி நிறைவுயற்றினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications