ரூ.2.5 கோடி.. கூலித்தொழிலாளி மகனுக்கு அமெரிக்காவில் உயர் கல்வி.. அடித்த லக்! நெகிழ வைக்கும் கதை
பீகார்: அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்லூரியான லஃபாயெட் கல்லூரியில் பயில ரூ.2.5 கோடி கல்வி உதவித்தொகை பீகாரை சேர்ந்த தலித் மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவன் இந்த கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள உள்ளார்.
கல்வி என்பது மனித சமூகத்தின் ஓர் ஆக்கப்பூர்வமான விசயமாகும். அது இந்த சமூகத்தை மேன்மேலும் சிறப்பாக வழிநடத்தி செல்ல உதவும் கருவி என பல கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், தனது உயர்கல்விக்காக ரூ.2.5 கோடி உதவித்தொகையை பீகாரை சேர்ந்த தலித் மாணவர் பெற்றுள்ளார்.

பீகார்
பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னாவின் கோன்புரா கிராமத்தில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் பிரேம் குமார். தலித் சமூகத்தை சேர்ந்த இவரது தந்தை தினக்கூலி தொழிலாளி ஆவார். இவர்களது குடும்பத்தில் பிரேம்குமார்தான் முதல் தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்கு செல்ல இருக்கும் நபர். இந்த நிலையில் தனது உயர் கல்விக்காக அமெரிக்காவின் லஃபாயெட் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார்.

லஃபாயெட் கல்லூரி
இந்த லஃபாயெட் கல்லூரியானது உலகம் முழுவதும் இருந்து 6 மாணவர்களை உயர்கல்வி பயில அழைக்கிறது. இதில் என்ன சிறப்பு எனில் அவர்களுக்கான முழு செலவையும் அக்கல்லூரி ஏற்றுக்கொள்ளும். அதாவது அவர்கள் படிக்க விரும்பும் துறை, விடுதி, உணவு, புத்தகங்கள் என அனைத்தையும் கல்லூரி ஏற்றுக்கொள்கிறது. இதற்கான உதவித்தொயை வழங்குகிறது.

ரூ.2.5 கோடி
அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2.5 கோடி வழங்கப்படும். இந்தியாவிலிருந்து இந்த உதவித்தொகையை மாணவர் பிரேம் குமார் தகுதியானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஷோஷித் சமாதான் கேந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் பிரேம், இந்த ஆண்டின் இறுதியில் பென்சில்வேனியாவுக்கு சென்று லாஃபாயெட் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் இளங்கலைப் பட்டம் பெற உள்ளார்.

உதவித்தொகை
பிரேம் குமாருக்கு உதவித்தொகை உறுதியானதையடுத்து லாஃபாயெட் கல்லூரியின் முதல்வர் மேத்யூ எஸ் ஹைட் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு சர்வதேச அளவில் அறியப்படுவது பிரேம் குமாருக்கு இது முதல் முறையல்ல. ஏற்கெனவே அவர் 14 வயதாக இருந்தபோது, டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார்.

நெகிழ்ச்சி
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தொடர்ந்து பேட்டியளித்த பிரேம், எனது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றதில்லை. நான்தான் எனது தலைமுறையின் பட்டதாரியாக இருக்கும் முதல் மாணவன். மாநிலம் முழுவதும் என்னை போன்ற மாணவர்களுக்கு டெக்ஸ்டரிட்டி குளோபல் அமைப்பு தொடர்ந்து உதவி வருகிறது. நான் இவ்வாறு உயர்கல்விக்கு செல்லவும் இந்த அமைப்புதான் காரணமாகும்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications