For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருப்பது உறுதி... முக்கிய ஆவணங்கள் சிக்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கான முக்கிய இதன்மூலம் தாவூத் இப்ராஹிம் இங்கு இல்லை என்று என்று பாகிஸ்தான் கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான தாவூத் இப்ராஹிம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தேடப்படும் குற்றவாளியான தாவூத், பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவரை இந்தியா கொண்டு வருவோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

Dawood Ibrahim's Recent Picture Part of Fresh Evidence of Presence in Pakistan

இதனை மறுத்துள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷீத், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என்றும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளிக்கவும் இல்லை எனவும் மும்பை குண்டுவெடிப்பு வழக்கை பாகிஸ்தான் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அது உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

இவர்தான் தாவூத் இப்ராஹிம்

தாவூத் இப்ராஹிம் குடும்பத்துடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் வசித்துவருகிறார் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. தாவூத் இப்ராஹிமின் சமீபத்திய படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மீசையில்லாத சற்றே முதிர்ச்சியாக தாவூத் காணப்படுகிறார்.

டெலிபோன் பில்

அதற்கு ஆதாரமாக அவரது மனைவி பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் தொலைபேசி கட்டணம் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சமீபத்திய படமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதரத்துடன் சிக்கியது

தாவூத் இப்ராஹிமிற்கு பாகிஸ்தான் அளித்த விசாவும் ஆதாரத்துடன் சிக்கியுள்ளது. இதன்மூலம் தாவூத் இப்ராகீம் குடும்பத்துடன் பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே வசிப்பது உறுதியாகி உள்ளது.

கிரிக்கெட் வீரர் மகனுடன்

தாவூத் இப்ராகீம் மகள் மகரூக், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாந்தத் மகனான ஜுனைத்தை திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பேச்சுவார்த்தை நடக்குமா?

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி நடந்தால், தாவூத் இப்ராஹிம் குறித்து கிடைத்துள்ள ஆவணங்களை இந்தியா, பாகிஸ்தானிடம் எழுப்பும் என தெரிகிறது.

60 பேரின் பெயர்பட்டியல்

அப்போது கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் மற்றும் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உள்பட 60 பேரின் பெயர்ப் பட்டியலை பாகிஸ்தானிடம் தர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா வலியுறுத்தும்

பாகிஸ்தானுக்கு தப்பியோடிய அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வசதியாக அவர்கள் அனைவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
National Security Advisers of India and Pakistan meet as scheduled on Monday, New Delhi will furnish fresh evidence of terror mastermind Dawood Ibrahim's presence in Karachi, a fact that Pakistan has denied for over two decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X