வெறும் ”5 வயசு” சிறுமி.. அண்டை வீட்டு அரக்கன் செய்த அசிங்கம் - தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்
அகர்தலா: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்று வனப்பகுதியில் புதைத்த 22 வயது இளைஞருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
2021 ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி.. திரிபுரா மாநிலம் ஹொவாய் மாவட்டம் நிசன் சந்திரபுரா காவல் நிலையத்தில் பெற்றோர் கலங்கிய கண்களுடன் புகார் ஒன்றை அளிக்கின்றனர். தங்கள் 5 வயது மகளை காணவில்லை என்று.

சிறுமியின் பள்ளி, அவர் அதிகம் செல்லும் இடங்களின் விபரங்களை எல்லாம் அவர்களிடம் கேட்டுப்பெற்ற போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர் விசாரணையில் சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்த அபிஜித் என்ற 22 வயது இளைஞர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
உடனே அவரை அழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அபிஜித் உண்மையை ஒப்புக்கொண்டார். நடந்தது என்னவென்று அபிஜித் சொல்வதை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
காணாமல்போன 5 வயது சிறுமியை அழைத்து தான் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய அபிஜித், பின்னர் வனப்பகுதியில் கொன்று புதைத்துவிட்டதாக கூறினார். உடனே வனப்பகுதிக்கு சென்று உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
சிறையில் இருந்த அபிஜித் மீதான போக்சோ மற்றும் கொலை வழக்கு விசாரணை ஹொவாய் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 35 சாட்சிகளிடமும் விசாரணை நடத்திய நீதிபதி சங்கரி தாஸ் அபிஜித் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக அறிவித்தது.
இதுகுறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், "இந்த வழக்கின் விசாரணை அதிகாரி பிதேஷ்வர் சின்ஹா, குற்றம் நடந்த 28 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். குற்றவாளி கோவாய் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications