ஹாஹாஹா.. லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தத்துக்கு "தொழில்நுட்ப கோளாறுதான்" காரணமாம்..!!

Subscribe to Oneindia Tamil

vadivelu
டெல்லி: தெலுங்கானா மசோதா தாக்கலின் போது லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு 'தொழில்நுட்ப கோளாறுதான்' காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற லோக்சபா நேற்று மாலை 3 மணிக்கு கூடியது. அப்போது தெலுங்கானா மசோதா மீது எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசத் தொடங்கினார். தெலுங்கானாவுக்கு எதிராக சபையில் கடும் அமளியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சுமார் 80 நிமிடங்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் லோக்சபா டிவி விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒளிபரப்பு தடங்கலான விஷயம் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக வருகிறோம். லோக்சபாவில் இருந்து சமிக்ஞைகள் வராததாலே வேறு வழியின்றி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+