For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய பாஜக- வீடியோ ஆதாரம் வெளியிட்ட கேஜ்ரிவால்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலை பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. அக்கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். ஆனால் சிறிது காலமே ஆட்சியில் இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் பின்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

Delhi deadlock: AAP alleges horse-trading by BJP, releases video

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. ஆளுநரும் கூட அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை அழைக்கலாம் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முயற்சிகளுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே பாரதிய ஜனதாவினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலை பேசும் வீடியோக்களை இன்று ஆம் ஆத்மி அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கட்சி எம்.எல்.ஏ தினேஷ் மோகானியாவிடம் பாஜகவின் மூத்த தலைவர் சேர்சிங் தாகர் ரூ4 கோடி தருவதாகவும் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேரம் பேசும் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றும் வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் இந்த குதிரைபேரம் குறித்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்

English summary
The Aam Aadmi Party on Monday released a video alleging that Delhi BJP leader Sher Singh Dagar tried to poach one of its MLAs by offering Rs.4 crore. Senior AAP leader Manish Sisodia, in a series of tweets in Hindi, alleged that the BJP offered Rs.4 crore to buy his party's Sangam Vihar MLA, Dinesh Mohania. The AAP has been alleging that the BJP is trying to buy its MLAs to be able to form its government in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X