For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை உறைய வைத்த கடும் குளிர்.. பனிமூட்டத்தால் 55 விமானங்கள், 70 ரயி்கள் ரத்து!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி இன்று, இந்த சீசனின் மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்தது. கடும் குளிரில் டெல்லி முழுவதும் நடுங்கிப் போய்க் கிடக்கிறது. மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான, ரயில், சாலைப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இன்று டெல்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை 2.6 டிகிரி என்ற அளவில் இருந்தது. இது வழக்கத்தை விட 5 டிகிரி குறைவாகும். கடும் பனி மூட்டம் காரணமாக 55 விமானங்கள், 70 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சாலைப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது.

Delhi Freezes at 2.6 Degrees; 55 Flights and 70 Trains Affected Due to Low Visibility

நாளை வெப்ப நிலை சற்று மேம்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது அதிகபட்ச வெப் நிலை 19.2 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை எதிரே இருப்பவர் யார் என்றே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்று 4.8 டிகிரியாக இருந்த நிலையில் இன்று அடியோடு வெப்பநிலை குறைந்து போனதால் டெல்லியே குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.

English summary
Delhi today recorded the lowest temperature of the season with the mercury dipping to 2.6 degrees Celsius, five notches below normal, with dense fog affecting 55 flights and about 70 trains. "The minimum temperature recorded at 8.30 AM was 2.6 degrees Celsius. The humidity recorded was 97 per cent and the visibility was less than 50 metres," an Indian Meteorological or MeT official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X