டெல்லி மக்களை வாட்டும் வரலாறு காணாத வெயில்... 62 வருடங்களில் அதிகபட்சமாக 118 பாரன்ஹீட் பதிவு
டெல்லி: கடந்த 62 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் 118 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடையின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது.

ஆனால், இதற்கு நேரெதிராக டெல்லியில் வெப்பம் சுட்டெரிக்கிறது. கடந்த சனியன்று அங்குள்ள பாலம் விமான நிலையத்தில் 118. 04 பாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் பதிவாகி இருந்தது. மிகக் குறைந்த அளவாக 83.48 பாரன்ஹீட் பதிவானது.
62 ஆண்டுகளுக்கு முன்னர்...
தலைநகர் டெல்லியில் கடந்த 1952ம் ஆண்டு அதிகபட்ச வெப்ப அளவு பதிவானது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 62 வருடக்களுக்குப் பின்னர் தற்போது அதிக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மின் தடை...
வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் மக்கள் மின்சாரத் தடையினால் மேலும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம் குறையும்...
இந்த வெப்பமான வானிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், எனினும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 113 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
வெறிச்சோடிய சாலைகள்...
கடும் வெப்பம் காரணமாக வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications