கடந்த ஓராண்டில் மத்திய அரசு பணியை விட்டு தலைதெறிக்க ஓடிய 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்..
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த ஓராண்டு காலத்தில் 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய பணியில் இருந்து, விடுதலை கிடைத்தால் போதுமென சொந்த மாநிலங்களுக்கே திரும்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள்வெளியாகி உள்ளன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மொத்தம் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் டெல்லி மத்திய பணியில் இருந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர். பொதுவாக மத்திய அரசு பணியில் இருந்து இதுபோல் அதிகாரிகள் சொந்த மாநிலத்துக்கு திரும்புவது வாடிக்கையானதுதான்.

இதேபோல் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணியில் இருந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால் மோடி ஆட்சி அமைந்தது முதல் நடந்த கதையே வேறாக இருக்கிறது. கடந்த 13 மாதங்களில் 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது பணிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே சொந்த மாநிலத்துக்கு டெல்லியில் இருந்து திரும்பிவிட்டனர்.
அதுவும் இவர்களில் 7 பேர் தங்களது மாநிலத்தில் தலைமைச் செயலாளராக பதவி வகித்துள்ளனர். இதுவரை இல்லாத இத்தகைய ஒரு நிலைமை அரசு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இதுவரையிலான அரசுகளில் செயல்பட்ட விதத்துக்கும் மோடி அரசின் பாணிக்கும் வேறுபாடு இருப்பதால் இதை கடைபிடிக்காத முடியாதவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருவதாகவும் கூறுகின்றனர்...
அரசு நிர்வாகம் முடங்காமல் இருந்தால் சரி!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications