திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு துப்பாக்கியுடன் வந்த டாக்டர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தரின் காரில் துப்பாக்கியும் 6 தோட்டாக்களும் இருந்ததைக் கண்டுபிடித்த சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் அவரை கைது செய்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், பைகள் சோதனை செய்யப்படும். சிறப்பு அதிரடிப் படையினரும், தேவஸ்தான ஊழியர்களும் சோதனையில் ஈடுபடுவர்.

Devotee Found With Gun At Tirupati Alipiri Checkpost

அப்படி சோதனையில் ஈடுபட்ட போது மஹாராஷ்ட்ராவில் இருந்து வந்த கார் ஒன்று சோதனை செய்யபப்பட்ட போது அதில் ஒரு துப்பாக்கியும் 6 தோட்டாக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் துப்பாக்கி வைத்திருந்தவர் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த டாக்டர். அவர் பெயர் சுதாகர் கண்பத் என தெரியவந்தது. மேலும், மஹாராஷ்ட்ராவில் உரிமம் பெற்றே அவர் துப்பாக்கி வைத்துள்ளார். ஆனால் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் உரிமம் அவரிடம் இல்லாததால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Maharashtra doctor brought gun to Tirupati temple and police inquired him.
Please Wait while comments are loading...