For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. இவான்கா இடுப்பை உத்துப் பாருங்க.. ஐயயோ இது அநியாயம்.. ஒரே கொந்தளிப்பு!

Google Oneindia Tamil News

ஆக்ரா: தாஜ்மகால் முன்பாக நின்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் திடீரென வைரலாக சுற்றி வருகிறது. காரணம்.. அதன் பின்னணியில் உள்ள ஒரு சர்ச்சை.

கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ட்ரம்ப் இரு நாள் பயணமாக தனது மொத்த குடும்பத்தாருடன் இந்தியா வருகை தந்திருந்தார். முதல் நாள் பயணத்தின்போது, அகமதாபாத்திலிருந்து, ஆக்ராவுக்கு ட்ரம்ப் குடும்பம் சென்றது.

அப்போது டிரம்ப்பும் அவர் மனைவி மெலானியாவும் ஜோடியாக தாஜ்மகால் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல இவான்கா தனியாக தாஜ்மகால் முன்னால் நின்று புகைப்படம் எடுத்தார்.

இன்ஸ்டாகிராம்

இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷேர் செய்தார். அதில், தாஜ்மஹாலின், பிரமாண்டமும், அழகும் பிரமிக்க வைக்கிறது என்று இவான்கா ட்ரம்ப் அதில் எழுதியிருந்தார். இருப்பினும், படங்களைப் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே, இவான்கா அந்த படத்தில் எடிட் செய்துள்ளார் என தீயாக தகவல் பரவ ஆரம்பித்தது.

இவான்கா பின்னணி

இவான்கா பின்னணி

38 வயதான இவான்கா 3 குழந்தைகளின் தாய். (ஏது அவுங்களுக்கு கல்யாணம் ஆச்சா..? என்று, 'இதுதான் இங்கிலீஷ் டீச்சரா?' என்ற பாணியில் யாராவது அதிர்ச்சியடைந்தால் அதற்கு சங்கம் பொறுப்பு இல்லைங்க) யூத மதத்தை சேர்ந்த ஜேர்ட் குஷ்னர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அமெரிக்காவின் லீடிங் தொழிலதிபர்களில், இவான்காவும் ஒருவர்.

இவான்கா சார்.., டிரஸ் சார்

இவான்கா சார்.., டிரஸ் சார்

3 குழந்தைகளுக்கு அம்மா ஆகியாச்சு, தொழிலதிபர் வேற.. ஆனாலும், தனது அழகு விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டானவர். அழகை ஆராதிப்பவர் என்பார்களே அதுபோன்றவர் இவான்கா. அவரது ஆடை, அணிகலன்கள் எப்போதுமே பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. தாஜ் மகால் வந்தபோது, அவர் பூப்போட்ட, Proenza Schouler நிறுவனத்தின் காஸ்ட்லியான ஆடையைத்தான் அணிந்திருந்தார். எப்போதுமே தனது அழகு விஷயத்தில் கவனம் செலுத்துபவர் அவர்.

புலன்விசாரணைகள்

புலன்விசாரணைகள்

இந்த நிலையில்தான், தாஜ்மகால் முன்பாக இவான்கா எடுத்துக் கொண்ட போட்டோவை போட்டோ ஷாப் செய்து அவர் இன்ஸ்டாவில் போட்டதாக 'கொந்தளிக்கிறார்கள்' நெட்டிசன்கள். "இங்க பாருங்க, இவான்கா கை மற்றும் இடுப்புக்கு இடையே உள்ள தண்ணீரை பாருங்க. போட்டோவின் மற்ற இடத்தில் உள்ள தண்ணீரை பாருங்க. வித்தியாசம் தெரியுதா.." என புலன்விசாரணை செய்து, நமக்குள்ளும் ஜேம்ஸ்பாண்ட் இருப்பதாக தங்களைத்தாங்களே, பெருமையாக நினைத்து பூரித்துப்போயுள்ளனர் அவர்கள். (உங்களுக்கும் ஏதாவது சந்தேகம்னா அந்த போட்டோவை உத்துப் பாருங்க) சிலர், 'ஆப்பிள்' போன் நிறுவனத்திற்கே மெயில் அனுப்பி, இது எடிட் செய்யப்பட்ட போட்டோவா என எக்ஸ்ட்ரா அக்கறையுடன் கேட்டுள்ளனர்.

இடுப்புக்கு ஒரு பஞ்சாயத்தா

இடுப்புக்கு ஒரு பஞ்சாயத்தா

அதாவது, இவான்கா இடுப்பு பகுதியில் சதை போட்டுள்ளதால், அதை எடிட் செய்து, மெல்லிடை போல காட்ட முயன்றுள்ளார் என்பதுதான், இவர்கள் கூட்டியுள்ள பஞ்சாயத்தின் பிராது. எத்தனை வயதானால் என்ன.., எந்த துறையில் இருந்தால் என்ன.. பெண்கள் தங்கள் அழகை மெருகூட்டி காட்டவே முயல்வார்கள். நம்மூர் குப்பாயி அக்கா கூட, 'எப்பில' போட்டோ போடனும்னா, கொஞ்சம் பிரைட்னஸ்சை அட்ஜஸ்ட் செஞ்ச பிறகுதான், அப்லோடே செய்வாங்க. இவான்காவும் அதில் விதி விலக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதெல்லாம் ஒரு விஷயம் என சர்வதேச மீடியாக்கள் வரை இப்போது விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சரி, விடு விடு.. கூட்டம்போடாத போ.. போ..

English summary
Ivanka Trump posed for photos in front of the Taj Mahal’s reflecting pool, writing on Instagram, “The grandeur and beauty of the Taj Mahal is awe inspiring!” But the pictures she posted is photoshoped?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X