For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் உடல்களை அட்டைப்பெட்டியில் சுற்றி அவமரியாதை செய்வதா?

அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை அட்டைப்பெட்டியில் சுற்றி எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சவப்பெட்டியில் வைக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்து எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தையொட்டிய தவாங்க் பகுதியில் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை அதிகாரிகள் 2 பைலட் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

நாட்டிற்காக சேவையில் ஈடுபட்ட போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் நேற்று கொண்டு வரப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை அவமரியாதை செய்யும் விதமாக அவர்களின் உடல்கள் சவப்பெட்டியில் எடுத்துவராமல் சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற அதிகாரி

ஓய்வு பெற்ற வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன் ஜெனரல் ராணுவ வீரர்களின் உடல் கொண்டு வந்திருந்த விதம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். தனது தாய் நாட்டிற்காக 7 ராணுவ வீரர்களும் தங்களது இன்னுயிரை துறந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடலை நல்ல முறையில் கொண்டு வந்து சேர்க்கக் கூட முடியவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ராணுவ மரியாதை அளிக்க உறுதி

ராணுவ வீரர்களின் உடலை எடுத்து வந்தது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து ராணுவத்தின் தகவல் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குனர் விளக்கம் அளித்திருந்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ராணுவ வீரர்களின் உடல்கள் சவப்பெட்டியில் வைத்து இறுதி மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குறைந்தபட்ச வசதி கூட இல்லையா?

குறைந்தபட்ச வசதி கூட இல்லையா?

ராணுவ வீரர்களின் உடல்கள் அட்டைப்பெட்டியில் சுற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கவுஹாத்திக்கு உடலைக் கொண்டு வரும் போது எடுக்கப்பட்டவை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இறந்த ராணுவ வீரர்களின் உடலைக் கொண்டு வர பாடி பேக் என்று சொல்லப்படும் பைகள் கூடவா இல்லை என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவ மரியாதை அளிக்க உறுதி

ராணுவ மரியாதை அளிக்க உறுதி

ராணுவ வீரர்களின் உடலை எடுத்து வந்தது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து ராணுவத்தின் தகவல் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குனர் விளக்கம் அளித்திருந்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ராணுவ வீரர்களின் உடல்கள் சவப்பெட்டியில் வைத்து இறுதி மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

English summary
Purported images of died soldiers bodies brought in cardboard boxes outraged the ill treatement of soldiers who sacrificed their lives to save their country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X