ஏப்ரலில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
டெல்லி: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 80 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.30ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1.30ம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இத்துடன் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21ம் குறைக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 59.20 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ47.20 பைசாவாகவும் இனி விற்பனை செய்யப்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications