கெஜ்ரிவாலை நடிக்க கூப்பிட்ட "டர்ட்டி" டைரக்டர்!
டெல்லி : டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் நடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கெஜ்ரிவாலை அணுகியதாகவும், ஆனால், அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பொக்காடியா.
கே.சி.பொக்காடியா இயக்கத்தில் அரசியல்வாதிகளின் வாழ்க்கையைப் பற்றிய படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்'. இப்படத்தில் வயதான அரசியல்வாதிகளாக ஓம்பூரி, ஜாக்கி ஷெராப், அனுபம்கெர் என்று மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நாயகியாக மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார்.
படக்காட்சிக்காக தேசியக்கொடி நிறத்தில் உள்ள துணியை அணிந்து நடித்ததற்காக, தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் என மல்லிகா ஷெராவத் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

மல்லிகா ஷெராவத்...
மேலும், இப்படத்தில் சில வயதான வெள்ளை வெளேர் அரசியல்வாதிகளின் கறுப்பு ஏரியாவை அம்பலப்படுத்தும் அனோக்கிதேவி என்ற ஒரு ஏழைப் பெண் கேரக்டரில், படுக்கையறைக் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் மல்லிகா.

படுக்கையறைக் காட்சி...
இதில் ஓம்பூரியுடனான நெருக்கமான காட்சிகளில் செம ஹாட்டாக மல்லிகா நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி படம் குறித்து மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

கெஜ்ரிவால்...
இந்நிலையில், தற்போதைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, அவர் ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்த புதிதில் தனது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார் பொக்காடியா.

பத்திரிகையாளர் கதாபாத்திரம்...
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கடந்த 2012ம் ஆண்டு டர்ட்டி பாலிடிக்ஸ் படம் தொடர்பான வேலைகளில் நாம் ஈடுபட்டிருந்தேன். அப்போது, கதையில் வரும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்திற்கு அன்னா ஹசேரேவின் இயக்கத்தில் இணைந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து, பின்னர் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கிய கெஜ்ரிவால் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினேன்.

நஷ்ருதின் ஷா...
இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சி தொடர்பான வேலைகளில் பிசியாக இருப்பதாகவும், அதனால் தன்னால் நடிக்க இயலாது என மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நஷ்ருதின் ஷாவை நடிக்க வைத்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications