மோடி அரசின் அதிரடி திட்டங்களால் குறைந்தது மின்துறை நஷ்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின்சாரத்துறை அமைச்சகம் சுமார் ரூ.29000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த DISCOM நஷ்டம் 41 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

உதய் மின்சார திட்டத்தின்கீழ், இணைந்ததால், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் மின் நஷ்டம் குறையத் தொடங்கியுள்ளது. சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேநேரம், ஹரியானாவில் 90 சதவீதம் அளவுக்கு நஷ்டம் குறைந்துள்ளது.

DISCOM Losses reduced by 41%

தற்போதைய மத்திய அரசின் மின்துறை சாதனைகள் குறித்து சில துளிகள்:

  • நாட்டிலுள்ள 18452 கிராமங்களில் 13,511 கிராமங்களில் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.
  • 2015ம் ஆண்டு நிலவரப்படி எளிதாக மின்சார வசதி பெறும் நாடுகள் அளவில் உலக வங்கியின் பட்டியலில் 99வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
DISCOM Losses reduced by 41%
Upset Over Power Cuts,Retired Judge Shoots Electricity Board Workers | Oneindia Tamil
  • காற்று ஆலை மற்றும் சோலார் மின்சாரம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் கட்டணம் குறைந்துள்ளது. யூனிட்டுக்கு ரூ.3.46 என்ற அளவில் கட்டணம் குறைந்துள்ளது.
  • 56 கோடி எல்இடி பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. உஜலா திட்டத்தின்கீழ் இந்த பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
  • மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் 7 லட்சம் மின் விசிறிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.
  • 20 லட்சம் எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத்தை சிக்கனப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Power Ministry has got success to save the power worth Rs. 29,000 crore. This is a big achievement that overall DISCOM losses reduced by 41% under this govt.
Please Wait while comments are loading...