For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பணிகளில் குழந்தைகளை துன்புறுத்தாதீர்கள்: குழந்தைகள் மனித உரிமைக் குழு கடிதம்

Google Oneindia Tamil News

மும்பை: தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதிகள் நெருங்கி வருகின்றன. அதேபோல், பள்ளித் தேர்வுகளும் முடிவடைந்து விடுமுறை விடப் பட இருக்கிறது. எனவே கட்சிகள் குழந்தைகளைத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

போஸ்டர் ஒட்டுவது, பிரச்சார கோஷம் இடச் செய்வது, தலைவர்கள் போன்ற முகமூடி அணியச் செய்து வலம் வர வைப்பது, நோட்டீஸ் கொடுப்பது என குழந்தைகளை கட்சிகள் துன்புறுத்தாமல் இருக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது குழந்தைகள் மனித உரிமைக் குழு.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் கட்சிகள் குழந்தைகளை வைத்து தேர்தல் பிரச்சராரத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அதனாலேயே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக மகாராஷ்டிடர குழந்தைகள் மனித உரிமை குழு தலைவர் திரிபாதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப் பட்டுள்ள கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது :-

அரசியல் கட்சிகள் குழந்தைகளை துண்டுபிரச்சாரங்களில் ஈடுபடுத்துவதும்,பேரணியில் ஈடுபட வைப்பதும், சில அரசியல் கட்சிகள் குழந்தைகளை வைத்து தேர்தல் பிரச்சராரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவைப்பது இது ஒரு உடல்ரீதியான துன்பத்த்தை கொடுப்பது ஆகும்.

குழந்தைகள் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The Maharashtra State Commission for Protection of Child Rights (MSCPCR) has written to the chief election commissioner to initiate a prohibiting measure so that no children may be roped in for election purposes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X