களையிழந்த முகம்.. காலில் பெரிய கட்டோடு படுத்த படுக்கையாக.. வைரலான மம்தா போட்டோ.. கொதித்த தொண்டர்கள்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலில் கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. திரிணாமுல் தொண்டர்கள் இடையே இந்த புகைப்படம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிருளியா பஜார் அருகே மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்த போது அவர் தாக்கப்பட்டார்.
தனது காருக்கு அருகே நின்று மமதா பானர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வேகமாக அவரை நோக்கி ஓடி வந்த நான்கு பேர் காரின் கதவை அடித்து சாத்தினார்கள்.இதனால் அங்கே நின்று கொண்டு இருந்த மமதா பானர்ஜி அப்படியே கீழே விழுந்து காயம் அடைந்தார்.

காயம்
இந்த தாக்குதலில் மமதா பானர்ஜி காலில் அடிபட்டது. இதையடுத்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு மமதா பானர்ஜி அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று
நேற்று இந்த சம்பவம் நடந்த போதே திரிணாமுல் தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் இறங்கிய திரிணாமுல் தொண்டர்கள் மொத்தமாக போராட்டத்தில் குதித்தனர். எங்கள் தீதிக்கு பாதுகாப்பு இல்லை.. இது திட்டமிட்ட சதி.. மம்தாவை வெல்ல முடியாது என்பதால் இப்படி செய்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
|
எப்படி
இந்த நிலையில்தான் தற்போது மமதா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. காலில் கட்டு போட்டுகொண்டு மருத்துவமனையில் முகத்தில் களையின்றி அவர் படுத்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மம்தாவின் முகம் மிகவும் சோர்வாக இருக்கிறது.

புகைப்படம்
இந்த புகைப்படம் தற்போது திரிணாமுல் தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் மாநில முதல்வருக்கு இப்படி ஒரு நிலையா என்று மேற்கு வங்க மக்கள் பலர் கொதித்து போய் உள்ளனர். இந்த ஒரு புகைப்படம் கண்டிப்பாக அம்மாநில தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும், மம்தா மீது மக்களுக்கு இது அனுதாபத்தை பெற்றுத் தரும் என்றும் கூறுகிறார்கள்.

பாஜக தொண்டர்கள்
அதே சமயம் பாஜக தொண்டர்கள் பலர்.. இதெல்லாம் நாடகம். தேர்தலை முன்னிட்டு இப்படி செய்கிறார். மக்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்று மம்தா இப்படி செய்கிறார் என்று புகார்களை அடுக்கி உள்ளனர். பிரஷாந்த் கிஷோர் சொல்லிக்கொடுத்த டெக்னிக் இது. அதைத்தான் மம்தா செய்கிறார் என்று புகார் வைத்துள்ளனர்.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications