Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண கஷ்டத்தில் காய்கறி தந்து உதவிய வியாபாரி.. 14 ஆண்டுக்கு பின் தேடி சந்தித்த டிஎஸ்பி! செம கிப்ட்

Subscribe to Oneindia Tamil

போபால்: கல்லூரி படித்தபோது பணமின்றி தவித்ததால் இலவசமாக காய்கறி கொடுத்து உதவிய வியாபாரியை 14 ஆண்டுகள் கழித்து டிஎஸ்பி ஒருவர் சந்தித்து கிப்ட் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நாம் அனைவரும் தினமும் பல நூறு பேரை சந்தித்து வருகிறோம். இதில் முகம் தெரியாத சிலருக்கு நாம் உதவி செய்து இருக்கலாம். அதேபோல் நம்மை யார் என்று தெரியாமலேயே இன்னொருவரும் நமக்கு உதவி இருக்கலாம். நிச்சயமாக நமக்கு உதவிய அல்லது நம்மிடம் உதவி பெற்ற நபர்களை அடுத்த முறை பார்க்கும்போது நம்மில் பலரும் அவரிடம் நிச்சயம் பேசி நலம் விசாரிப்போம்.

madhya pradesh dsp

ஆனால் தற்போது 14 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவராக இருந்தபோது தனக்கு காய்கறி கொடுத்து உதவிய வியாபாரியை டிஎஸ்பி ஒருவர் தேடி சென்று கிப்ட் கொடுத்து நெகிழ வைத்த சம்பவம் பலரின் மனதையும் கவர்ந்துள்ளது. அவர் யார்? என்ன நடந்தது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பெஹாத் டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் சந்தோஷ் படேல். இவருக்கு வயது 33. இவர் மத்திய பிரதேசத்தின் பன்னா அருகே உள்ள தேவ்கான் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு கைவினை கலைஞர். சந்தோஷ் படேலின் குடும்பம் ஏழ்மையானது. மண்ணெண்ணெய் விளக்கு வைத்து பள்ளி படிப்பை சந்தோஷ் படேல் படித்து முடித்தார். அதன்பிறகு 2009-2010 காலக்கட்டத்தில் போபால் ்ப்சாரா டாக்கிஸ் ஏரியா அருகே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்.

அப்போது சந்தோஷ் படேல் பணக்கஷ்டத்தில் தவித்தார். இந்த வேளையில் அங்கு காய்கறி வியாபாரம் செய்த சல்மான் கான் என்பவர் அவருக்கு உதவி செய்தார். சந்தோஷ் படேலுக்கு தேவையான காய்கறிகளை கொடுத்து உதவினார். பணம் கொடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது காய்கறி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நல்ல உறவு வந்தது. அதன்பிறகு கல்லூரி படிப்பை முடித்த சந்தோஷ் படேல் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

வனத்துறை மற்றும் போலீஸ் துறையில் பணியில் சேர அவர் தேர்வு எழுதினார். 2017 ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில போலீஸ் தேர்வில் சந்தோஷ் படேல் தேர்ச்சி பெற்றார். தற்போது டிஎஸ்பியாக அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் தனக்கு உதவி செய்த சல்மான் கானை காண வேண்டும் என்று சந்தோஷ் படேலுக்கு நீண்ட காலமாக எண்ணம் இருந்தது. போபாலுக்கு பணி இடமாற்றம் செய்தால் அவரை எப்படியாவது பார்த்து விடலாம் என்று சந்தோஷ் படேல் நினைத்தார். ஆனால் அவருக்கு நினைத்தபடி பணி இடமாறுதல் என்பது கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலில் தான் 4 நாள் பயிற்சிக்காக போபாலுக்கு சந்தோஷ் படேல் சென்றார். இந்த வேளையில் அவர் சல்மான் கானை பார்க்க முடிவு செய்தார். தான் கல்லூரி காலத்தில் சல்மான் கான் கடை வைத்திருந்த இடத்துக்கு சந்தோஷ் படேல் சென்றார். அங்கு சல்மான் கான் இருந்தார். சல்மான் கானை பார்த்த சந்தோஷ் படேல், ‛‛என்னை நியாபகம் இருக்கிறதா'' என்று கேட்டார். அதற்கு சல்மான் கான், ‛‛நியாபகம் இருக்கிறது சார். காய்கறி வாங்கி கொள்ளுங்கள்'' என்று சிரித்தபடி கூறினார்.

மேலும் இருவருக்கும் பழைய நினைவுகள் மனதில் வர அவர்கள் கட்டியணைத்து நட்பு பாராட்டினர். இந்த வேளையில் சந்தோஷ் படேல், சல்மான் கானுக்கு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பணம் கொடுத்தார். முதலில் அதனை வாங்க மறுத்த சல்மான் கான் அதன்பிறகு சந்தோஷ் படேல் கட்டாயப்படுத்தியதால் வாங்கி கொண்டார். இருவரும் 14 ஆண்டுகள் கழித்து தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுபற்றி காய்கறி வியாபாரி சல்மான் கான் கூறுகையில், ‛‛என் கடை முன்பு போலீஸ் வாகனம் வந்ததை நினைத்து பயந்துவிட்டேன். ஆனால் சந்தோஷ் படேல் இறங்கி வந்ததை பார்த்து மகிழ்ந்தேன். என் பழைய நண்பரை நீண்டகாலத்துக்கு பிறகு பார்த்தேன். நான் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு காய்கறி விற்பனை செய்கிறேன். என்னை யாரும் நினைவில் வைப்பது இல்லை. ஆனால் 14 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் அதிகாரியான பிறகும் என்னை நியாபகம் வைத்து என்னை சந்தோஷ் படேல் சந்தித்துள்ளார். ஸ்வீட், பணம் தந்தார்.

அவரது உதட்டில் வடு உள்ளது. அதனை வைத்து தான் 14 ஆண்டுகளுக்கு பிறகும் அடையாளம் கண்டேன். எனக்கும், அவருக்கும் ஒரே வயது தான். இருவருக்கும் 33 வயது தான் ஆகிறது. அவரும் என்னை போல் தான் ஏழையாக இருந்தேன். எங்களுக்குள் சிறுவயதிலேயே நல்ல புரிதல் இருந்தது. அந்த காலத்தில் அவருக்கு காய்கறி கொடுப்பது என்பது எனக்கு பெரிய சவாலாக இல்லை. ஏழையாக ஒருவர் பசியாக இருக்கும்போது அவருக்கு வழங்காமல் விற்பனை செய்து வரும் பணத்தை நான் விரும்பவில்லை. நான் பல மாணவர்களுக்கு இலவசமாக காய்கறிகளை கொடுத்துள்ளேன். இது என்னை மகிழ்ச்சியாக வைக்கிறது.

சந்தோஷ் படேலை நான் சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறேன். ஆனால் அவரிடம் ஒருநாள் கூட பேச முயற்சித்தது இல்லை. ஆனால் அவரே என்னை தேடி வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது'' என்று தெரிவித்தார். சல்மான் கானுக்கு மொத்தம் 5 சகோதரர்கள், 3 சகேதாரிகள் உள்ளனர். இவர் போபாலை சேர்ந்தவர். சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது குடும்பம் ஏழ்மையானது தான். அவரது சகோதரர்கள் காய்கறி வியாபாரம் மற்றும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் படேல் கூறுகையில், ‛‛என் கிராமத்தில் மொத்தம் 120 பேர் உள்ளனர். நான் தான் முதல் முதலில் கல்லூரி படிப்பை முடித்தேன். அதேபோல் எனது குடும்பத்தில் நான் தான் முதல் போலீஸ் அதிகாரி. நான் இன்ஜினியரிங் படிப்புக்காக போபால் சென்றேன். ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் உணவு வாங்க பணம் இருக்காது. இந்த சமயத்தில் சல்மான் கான் தான் உதவி செய்தார். கேரட், தக்காளியை சாப்பிட கொடுப்பார். கத்திரிகாய் உள்பட காய்கறிகளை சமைக்க கொடுப்பார். அவரின் இதயம் ரொம்ப தங்கமானது. நான் அவரை பல முறை சந்திக்க விரும்பினேன். ஆனால் அதற்கானக நேரம் வரவில்லை. இப்போது அவரை 14 ஆண்டுகள் கழித்து சந்தித்துவிட்டேன். ஹேப்பியாக இருக்கிறேன்'' என்றார். டிஎஸ்பியாக சந்தோஷ் படேல், சல்மான் கானை சந்தித்த போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இருவருக்கும் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+