For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சட்டசபை தேர்தல் தேதி... இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்?

குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிக்க இருக்கிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கான தேர்தல் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமாச்சலப் பிரதேசத்துக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் சாடல்

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடிதான் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

குஜராத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவே தேர்தல் தேதி தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 182 இடங்களைக் கொண்டது குஜராத் சட்டசபை. தற்போது பாஜக- 118; காங்கிரஸ்- 42; தேதியவாத காங்கிரஸ்- 2; ஐக்கிய ஜனதா தளம்-1 என பலம் இருக்கிறது.

3 கட்சிகள் களத்தில்

3 கட்சிகள் களத்தில்

இம்முறை குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸுடன் ஆம் ஆத்மியும் மல்லுக்கட்டுகிறது. இம்மாநிலத்தில் முதல் முறையாக மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

பட்டேல்கள், ஜிஎஸ்டி

பட்டேல்கள், ஜிஎஸ்டி

குஜராத் தேர்தலைப் பொறுத்தவரையில் பட்டேல்களின் இடஒதுக்கீடு விவகாரம் மிக முக்கியமான ஒன்றாகும். அதேபோல் மத்திய அரசின் ஜிஎஸ்டி விவகாரமும் பிரதான பிரச்சனையாக இடம்பெறும்.

English summary
The Election Commission (EC) will announce on Monday the dates for for the crucial Gujarat assembly elections 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X