For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் மொத்த வாக்காளர்களில் 25 சதவீதம் உ.பி., பீகாரில்தான்...!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் மொத்த வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் உ.பி, பீகாரில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 81.5 கோடியாகும்.

இதுகுறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 81.5 கோடி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2009ல் 71.69 கோடி பேர்

2009ல் 71.69 கோடி பேர்

கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 77.69 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

உ.பி. - பீகாரில்தான் வாக்காளர்கள் அதிகம்

உ.பி. - பீகாரில்தான் வாக்காளர்கள் அதிகம்

தேர்தல் ஆணைய புள்ளிவிவரப்படி உ.பி. மற்றும் பீகாரில்தான் அதிக அளவிலான வாக்காளர்கள் உள்ளனர். அதாவது நாட்டின் மொத்த வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

இரு மாநிலங்களிலும் 120 எம்.பி்க்கள்

இரு மாநிலங்களிலும் 120 எம்.பி்க்கள்

மேலும் இந்த இரு மாநிலங்களிலும் மொத்தமாக 120 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பியில் 13.43 கோடி வாக்காளர்கள்

உ.பியில் 13.43 கோடி வாக்காளர்கள்

உ.பியில் 13.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதாவது 16 சதவீத வாக்காளர்கள் உள்ளனர்.

7 பிரதமர்களை அனுப்பிய உ.பி.

7 பிரதமர்களை அனுப்பிய உ.பி.

உ.பி. மாநிலத்திலிருந்துதான் அதிக அளவிலான பிரதமர்களை இந்தியா கண்டுள்ளது. அதாவது மொத்தம் 7 பிரதமர்கள் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குஜராத்தில் 4 கோடி வாக்காளர்கள்

குஜராத்தில் 4 கோடி வாக்காளர்கள்

பிரதமர் கனவுடன் உலா வரும் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் 4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

English summary
New data released by the Election Commission (EC) reveals that a record 815 million voters will be eligible to vote in the forthcoming general election expected to be held in April-May. Of this, based on Census data, it is estimated that a little under a fifth will be first-time voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X