சுடச்சுட லோக்சபா தேர்தல் ஸ்பெஷல்: சாப்பிடு... சிந்தி... வாக்களி... இது அலகாபாத் ஸ்டைல்
அலகாபாத்: தேர்தல் கால பரபரப்புகளை வைத்து எதைச் செய்தாலும், எதை விற்றாலும் நிச்சயம் அது நல்ல விலை பெறும் என்பதற்கேற்ப நரேந்திர மோடியையும், ராகுல் காந்தியையும் வைத்து காசு பார்த்து வருகிறார்கள் அலகாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டல் நிர்வாகத்தினர்.
தங்களது உணவு வகைகளுக்கு நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி பெயரை சூட்டி கல்லா கட்டி வருகிறார்கள் இவர்கள். லோக்சபா தேர்தல் ஸ்பெஷல் உணவுகளான இவற்றை ‘மிஷன் மே 2014' எனப் பெயரிட்டு மெனுவாக வரிசைப் படுத்தியுள்ளனர்.
ஆனால் நரேந்திர மோடி பெயரிலான உணவுக்குத்தான் அதிக விலை வைத்துள்ளனர். ராகுல் பெயரிலான உணவின் விலை சற்று குறைவுதான்.

விழிப்புணர்வு ஒன்றே நோக்கமாம்,,,
இந்த நூதன வியாபரத்தின் பின்னணியில் மக்களிடையே நாட்டு நடப்பையும், தேர்தல் பரபரப்பும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்றும் ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் தருகிறது.

சாப்பிடு.. சிந்தி... வாக்களி!
ராஜு ஜைஸ்வால்தான் இந்த ஹோட்டலின் உரி்மையாளர். சரியாக சாப்பிடுங்கள், சரியாக சிந்தியுங்கள், சரியாக வாக்களியுங்கள் என்ற கேோஷத்துடன் இந்த உணவு வகைகளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நமோ தாலி...
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சுருக்கமாக ‘நமோ' என அழைக்கப் படுகிறார். எனவே இந்த உணவு வகையின் பெயர் ‘நமோ தாலி'. இதில் இனிப்பு உள்ளிட்டவை அடக்கம். குஜராத் குறித்த உணவான இது பாஜகவின் கொடி நிறத்தில் உள்ளது.

ராகா பேஸ்கட்...
அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பெயரின் சுருக்கமான ‘ராகா'வைச் சேர்த்து ‘ராகா பேஸ்கட்' என்றொரு இன்னொரு உணவு. இதில் காங்கிரஸின் தாக்கம் அதிகம் இருக்கிறது. காங்கிரஸ் கொடியின் கலரும் இடம் பெற்றுள்ளது.

நமோவுக்கு விலை அதிகம்...
நமோ தாலியின் விலை ரூ. 110. அதேசமயம் ராகா வின் விலை ரூ. 90 மட்டுமே.

இனிப்பு, புளிப்பு, காரம்....
நமோ தாலியில், சப்பாத்தி, பனீர் மசாலா, காய்கறிகள், பருப்பு, ஜீரா புலாவ், ரசகுல்லா, ரைத்தா பைன் ஆப்பிள், ரைசின் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இட்லி ஸ்பெஷல்....
ராகா பேஸ்கட்டில் இட்லி, வடை, பராத்தா ரோல், சட்னி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

சாப்பாட்டிலும் நமோ தான் டாப்....
இதில் நமோ தாலிதான் நன்றாக விற்பனையாகிறதாம். ராகா பேஸ்கட்டுக்கு கிராக்கி குறைவாகத்தான் இருக்கிறதாம். மேலும் பாஜகவினரும் கூட நிறையப் பேர் நமோ தாலியை சாப்பிட்டுச் சந்தோஷமாக செல்கிறார்களாம்.

மோடி ரசிகர்கள்...
டாக்டர் பூனம் திவிவேதி என்ற ஒரு வாடிக்கையாளர் கூறுகையில், நான் மோடியின் விசிறி. எனவே நமோ தாலிதான் என்னுடைய பேவரைட் என்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications