For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு போட முடியாது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கள்ளக்காதலைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் போட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கணவரோ அல்லது மனைவியோ கள்ளக்காதல் வைத்துக் கொள்வதைக் காரணம் காட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்ட முடியாது. அதேசமயம், இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்காதலை மன ரீதியான கொடுமையாகவும் சித்தரிக்க முடியாது. அதைக் கொடுமையாகவும் கூற முடியாது. இதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டவும் கூடாது. வேண்டுமென்றால் இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Extra marital affairs is not "cruelty", says SC

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் கள்ளக்காதலால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக புகார் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நபருடன் இணைத்துப் பேசப்பட்ட பெண்ணும், அப்பெண்ணின் தாயார் மற்றும் சகோதரரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக நீதிமன்றங்களில் அப்பீல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து சுப்ரீ்ம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை விதிக்கப்பட்ட நபர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கிலிருந்தும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது 306, 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமாகும். தவறானதாகும்.

கள்ளக்காதல் என்பதை 498ஏ பிரிவின் கீழ் "ஹராஸ்மென்ட்" என்று சொல்ல முடியாது. அது தவறான நடவடிக்கைதான், செயல்தான் என்றாலும் கூட அதை சித்திரவதை என்ற பட்டியலில் கொண்டு வர முடியாது. குற்றச் செயலாக கருத முடியாது.

ஒரு கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்காக அதைக் கொடுமையாக கருதி மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டார் என்று மனைவி கூற முடியாது. அதேபோலத்தான் மனைவிக்கும்.

மன ரீதியான கொடுமை, சித்திரவதை என்பதற்குரிய அம்சங்கள் கள்ளக்காதலுக்கு இல்லை. எனவே அதை அதில் சேர்க்க முடியாது. மாறாக இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்று கூறியுள்ளனர்.

English summary
SC has ruled that a husband's extra marital affairs is not always amount to cruelty in an appeal hearing and acquitted the accused from all the charges against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X