For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கில் 10 கோடி போலி அக்கெளண்டுகள்: இந்தியாவில்தான் அதிகமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டன சமூக வலைதளங்கள்.

அதிகரிக்கும் விதிமீறல்:

அதிகரிக்கும் விதிமீறல்:

சமூக வலைதளங்களில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதில், ஒருநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பது நிபந்தனை மற்றும் விதிமுறையை மீறும் செயலாகும். ஆனால், உலகம் முழுவதும் இந்த விதிமீறல் அதிகரித்து வருவதாக பேஸ்புக் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

”டூப்ளிகேட்” கணக்கு:

”டூப்ளிகேட்” கணக்கு:

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட டூப்ளிகேட் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 15 சதவீதம் அதிகரித்து, 10 கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம்:

இந்தியாவில் அதிகம்:

மொத்தம் 12.8 கோடி டூப்ளிகேட் கணக்கு இருப்பதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில்தான் டூப்ளிகேட் கணக்குகள் அதிகளவில் உள்ளன.

மொபைல் “ஃபேஸ்புக்”:

மொபைல் “ஃபேஸ்புக்”:

அதே போல, மொபைல் மூலமாக தினசரி பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 75 கோடியில் இருந்து 34 சதவீதம் அதிகரித்து 100 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா, பிரேசில், அமெரிக்காவில்தான் அதிகமான மக்கள் மொபைலில் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர் என்பதும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Social networking site Facebook said the website may have over 100 million ‘duplicate’ accounts, and their percentage being higher in developing markets such as India, besides 5 to 15 million ‘undesirable’ accounts registered with it worldwide, as per company’s estimations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X