ஆந்திராவில் ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமலை : ஆந்திராவில் தனது வீட்டில் ஒரு பல்பு பயன்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு விவாசாயி ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் கொட்டப்பல்லியில் உள்ள நரசுருகோட்டி கிராமத்தில் ரவீந்தரா என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் இதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

 Farmer got shocked by seeing EB bill of 8 lakhs

இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மின் இணைப்பு பெற்று, ஒரே ஒரு பல்பு மட்டும் தனது வீட்டில் அவர் போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான மின் கட்டணம் 85 ரூபாயும், ஜனவரி மாதம் 87 ரூபாயும் மின் கட்டணமாக அவர் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மின் கட்டணம் கடந்த 16ம் தேதி வந்தது. அப்போது அதனை பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். அதாவது ஒரே ஒரு பல்புக்கு, மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 690 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது முழுக்க முழுக்க மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமாக தான் பார்க்கப்படுகிறது. மின் கட்டணம் தொடர்பாக கொட்டப்பல்லி மின்வாரிய அதிகாரிகளிடம் ரவீந்தரா கேட்டதற்கு, அவர்கள் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று தெரிவித்தார்களாம். இதனால் அந்த விவசாயி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Farmer got shocked by seeing eb bill of 8 laksh for only one bulb which was used
Please Wait while comments are loading...